• Monday, March 27, 2017

  திருப்பழுவூர் - ThiruPazuvoor

  சிவாயநம.திருச்சிற்றம்பலம்.---------------------------------------------------------------------
         🌺 திருப்பழுவூர். 🌺 (ThiruPazuvoor)
  ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

  இறைவன்:
  வடமூலேஸ்வரர், யோகவனேஸ்வரர், ஆலந்துறையார்(வடம்--ஆல்.)

  இறைவி:
  அருந்தவநாயகி.

  தலமரம்: ஆல்.

  தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம். (கோவிலுக்கு எதிரிலேயே அமைந்துள்ளது.)

  சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமையப்பெற்றுள்ள 63 - தலங்களுள் 55- வது தலமாகப் போற்றப் பெறுகின்றது.

  இருப்பிடம்:
  திருச்சி-- அரியலூர் சாலையில் இருக்கின்றது.
  மேலப்பழுவூர், கீழப்பழுவூர் என்று இரண்டு பிரிவுகளாக உள்ளன.
  இத்தலம் கீழப்பழுவூர் ஆகும்.

  பெயர்க்காரணம்:
  பழு--ஆல்.
  ஆல் தலமரமாதலால் பழுவூர் எனப் பெயர் உண்டாகியது.

  அம்பிகை தவஞ் செய்ததால் யோகவனம் என்றும் கூறப்படுகின்றது.

  இத்தலத்திற்கு திருப்பழுவூர், பழுவூர், சிறுபழுவூர் என்கிற பெயர்களும் உண்டு.

  கோவில் அமைப்பு:
  கிழக்கு நோக்கிய ஆலயம்.
  கோவிலுக்கு எதிரிலேயே குளம் அமையப் பெற்றுள்ளது.

  அம்பாள் சந்நிதி தனியாக இருக்கின்றன.

  அர்த்த மண்டபச் சுவரையொட்டி காலசம்ஹாரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர் ஆகியோர் திருமேனிகள் இருக்கின்றன.

  தென்புறத்தாலிருக்கும் மேடை மீது அறுபத்து மூவர்கள், திரிபுராந்தகர், ரிஷபாருடர் ஆகியோரின் உற்சவத் திருமேனிகளும் இருக்கின்றன.

  இந்த உற்சவத் திருமேனிகள் மிகவும் அழகு வாய்ந்த சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டவையாகும்.

  பிரகாரத்தில் நுழைந்தால்,  துர்க்கை, அப்பர், சம்பந்தர், விநாயகர், வீரபத்திரர், சப்தமாதாக்கள் ஆகியோரின் திருமேனிகளும் உள்ளன.

  கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை போன்றோர்களும் இருக்கின்றார்கள்.

  கயமுகசூரனை அழித்த பின்னர் இங்கு வந்த விநாயகரை நிருத்த விநாயகர் என அழைக்கப்படுகின்றார்
  மருதுடையார் ஆற்றின் தென்பகுதியில் கிழக்கு நோக்கியதும், ஐந்து நிலை இராஜ கோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் கோவில் அமையப் பெற்றிருக்கிறது.

  அம்பிகை தவமிருந்து யோகம் செய்த காரணத்தினால் இவ்விடத்தை யோகவனம் எனவும் கூறப்படுகிறது.

  சுவாமி சந்நிதியின் வலது பக்கமாய் ஒற்றைக்காலில் நின்று தழம் செய்யும் கோலத்தில் அம்பிகையின் திருவுருவம் விளங்குகின்றது.

  மூலவர் பிருத்திவி வடிவமாக விளங்குகிறார். ஆதலால் மூலவருக்குச் சாம்பிராணி தைலமே சாத்தப்படுகின்றது.

  லிங்கம் மிகச் சிறிது என்பதால், அடையாளம் காண்பதற்காக, உயர்வுக்குக் குவளை சாத்தி அபிஷேகம் செய்யப்படுகின்றது.

  தேவாரம் பாடியவர்கள்:
  *சம்பந்தர்:*2-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே.

  தல அருமை:
  பரசுராமர் தன் தாயைக் கொன்ற பழியை தீரும் பொருட்டு வழிபட்ட பதி இதுவாகும்.

  மூலவர் முன்னாலுள்ள மேல் உத்திரத்தில் பரசுராமரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

  ஜமத்கனி முனிவர் உருவம் மேலப் பழுவூரில் உள்ளது.

  உமை தவம் மேற்கொண்ட பதி.

  மேலும், பிரம்மன், திருமால், அகத்தியர், இந்திரன் சந்திரன், வசிட்டர், காசிபர், வியாசர் முதலியோர் வழிபட்ட பெருமையுடைய தலமிதுவாகும்.

  தனிச் சந்நிதியில் அருளும் அம்பிகை அருந்தவ நாயகி, இறைவனின் யோகவனேஸ்வரர் என்ற பெயருக்குக் காரணமும் இவள்தான்.

  தாம்பத்ய சங்கரர், அர்த்தநாரீஸ்வரர் இருப்பதால் குடும்ப ஒற்றுமைக்கு அருளும் தலம்.

  காலசம்ஹார மூர்த்தி இருப்பதால் திருக்கடையூருக்கு நிகரான.எமபயம் தீர்க்கும் கோவில்.

  அம்பிகை தவம் செய்து இறைவனை மணந்துகொண்டதால், இத்தலம் வந்து தொழுவோர்க்கு திருமணத் தடை இருப்பின்,  திருமணத்தடை அகலும்.

  பரசுராமரின் வேண்டுதலுக்கேற்ப சகல தேவர்களும் இங்கே சூட்சும ரூபமாக உறைவதால் இங்கு வந்து வழிபட்டால் சகல செல்வமும் சேரும் என்பது உறுதியான நம்பிக்கை விளங்கி வருகிறது.

  சுற்றுப் பாதையில் செல்லும் போது, சப்த மாதர்களையும், அருகே வீரபத்திரரையும் தரிசிக்க முடியும்.

  தவமிருந்த அம்பிகைக்கு உறுதுணையாக வந்தவர்கள் சப்தமாதர்களும், வீரபத்திரரும் இவர்களாவர்.

  மிகவும் பழமையானதான மருத்துவக் குடி பஞ்சாங்கம் இத்தலத்தை ஆதிகுல ஸ்தலம் என்றும், இங்கு அமர்ப்திருக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிப்பவர் கல்வியும், செல்வமும் பெறுவர்.

  தல அருமை:
  மூவர், முனிவர், முக்கோடி தேவர்கள் எல்லாம் இருக்கும் இடம் இந்தக் கீழப்பழுவூர்.

  இறைவன் நாட்டான்மை ஸ்தானம் கொண்டு தீர்ப்பு சொன்ன தலம்.

  சிவன் தலைவர் என்றால் ஊர்மக்கள் தேவர்களும, முனிவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்கள்.

  தாய் செய்த தவறுக்காக தந்தையின் சொல் படி மகனான பரசுராமன் தாய் ரேணுகாஜதேவியை கொன்றதனால் மாத்ருஹத்தி தோஷம் பீடித்தது.

  தந்தே ஜமதக்னி முனிவரின் வரத்தின்படி தாய் ரேணூகா தேவி மீண்டும் உயிர் பெற்றார்.

  இருப்பினும் மாத்ருஹத்தி தோஷம் பீடித்ததால் பல தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கியும், தோஷம் நீங்கப்படவில்லை.

  பின் இத்தலத்திற்கு வந்து ஆலமரத்தின் கீழிருந்த புற்று லிங்கத்தை வணங்கியதும் மாத்ருதோஷம் விலகியதை உணர்ந்தார்.

  ஆலமரத்தின் கீழ் இறைவன் தோன்றியமையால் ஆலந்துறையார் ஆனார்.

  கல்வெட்டுக்கள்:
  பெரும்பழுவூர் பழுவேட்டையர் என்ற தொடர் கல்வெட்டில் காணப்படுவதிலிருந்து சோழர் மன்னர்களுடைய அதிகாரிகளாகிய பழுவேட்டரையர் என்ற பட்டம் பெற்ற கூட்டத்தினர் சிலர், அக்காலத்தில் கோயில் காரியங்கள் நடவடிக்கைகளைக் கவனித்து வந்ததாக தெரிகிறது.கல்வெட்டில் பிரமதேயமான சிறு பழுவூர்.

  ஆலந்துறை என்று தலமும், ஆலந்துறை மகாதேவர் என்ற சுவாமியும் குறிக்கப்படுகின்றனர்.

  குலோத்துங்கன், ராஜாதிராஜன், ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

  இம்மன்னர்கள் இக் கோயிலுக்கு நிலங்களை விட்டதையும், வெள்ளிப் பாத்திரங்களையும் பொன்னாபரணங்களையும் வழங்கியதுமான செய்திகள் கல்வெட்டுக்களில் தெரிய வருகிறது.

  திருவிழாக்கள்:
  பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமதக்னி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீக விழா நடைபெறும்.

  பூஜை:
  சிவாகம முறையில் நான்கு கால பூசை.

  காலை 6-00 மணி முதல் பகல் 12-00 மணி வரை.

  மாலை 5-00 மணி முதல் இரவு 8-00  மணி வரை.

  அஞ்சல் முகவரி:
  அருள்மிகு. வடமூலேஸ்வர் திருக்கோயில்.
  கீழப்பழுவூர் & அஞ்சல் -621 707
  அரியலூர் வட்டம்- மாவட்டம்.

  தொடர்புக்கு
  ஜி.குமார். (எழுத்தர்)
  97861 63399
  99438 82368.

           திருச்சிற்றம்பலம்.


  ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
  அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.

  ஆசை தீர கொடுப்பார்---அடங்கல் விடைமேல் வருவார்.

  Blog Archive

  Powered by Blogger.